கந்தன் கோவிலில் இன்று ஆடிப்பரணி
ADDED :3682 days ago
திருத்தணி: சத்திய சாட்சி கந்தன் கோவிலில், இன்று ஆடிப்பரணியும், நாளை ஆடிக்கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது.திருத்தணி அடுத்த, அருங்குளம் கூட்டுச் சாலையில், சத்திய சாட்சி கந்தன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று, ஆடிப்பரணியை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. நாளை, ஆடிக்கிருத்திகை விழாவில், அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன.