திருமலையில் தலை முடி ஐந்து கோடிக்கு ஏலம் போனது!
ADDED :3711 days ago
திருப்பதி: திருமலையில் மொட்டை போட்டுவிட்டு பெருமாளை தரிசிப்பது பக்தர்களுக்கு பிரியமான விஷயமாகும். இந்த வருடம் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட முடி ஏலம் விடப்பட்டதில் ஐந்து கோடியே ஐம்பது லட்ச ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானம் வந்துள்ளது.