உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா!

படவட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா!

கடலூர்: கடலூர் படவட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நடந்தது. கடலூர், புதுப்பாளையம் படவட்டம்மன் கோவிலில் ஆடி 4ம்  வெள்ளி பெருவிழா மற்றும் திருவிளக்கு பூஜையையொட்டி கடந்த 6ம் தேதி காலை அபிஷேகம் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.  இதில், பெண்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து 7ம் தேதி காலை கரகம் எடுத்து வருதல், அபிஷேகம், மதியம் தீபாராதனை, கஞ்சி வார்த்தல்  நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !