உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிப்படை வசதிகள் இல்லாமல் மடப்புரத்தில் பக்தர்கள் அவதி

அடிப்படை வசதிகள் இல்லாமல் மடப்புரத்தில் பக்தர்கள் அவதி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  மடப்பு  ரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலம். வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைக  ளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலில் கழிப்பிடம், காலணி பாதுகாக்கும் அறை   உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்க, பொருட்கள் வைக்க கட்டடம் கட்டியும் இன்று வரை பயன்  பாட்டிற்கு வராததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  கழிப்பிட வசதி இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வைகை ஆற்றுக்குள் இயற்கை உபாதையை   கழிக்க ஒதுங்குகின்றனர்.  இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் இருந்து பணம், நகையை பறித்து செல்கின்றனர். காலணி பாதுகாக்  கும் அறையில் ஒரே ஒரு ஊழியர் இருப்பதால் பக்தர்கள் கோயில் வாசலில் காலணிகளை விட்டு செல்கின்றனர்.  கோயில் வாசல் முழுவதும் செருப்  புகள் நிறைந்திருப்பதால் பக்தர்கள் கஷ்டப்படுகின்றனர். கோயில் வாசலை மறைத்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு   கோயிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.

வெளியூர் பக்தர் முனீஸ்வரன் கூறுகையில்; கோயிலில் அடிப்படை வசதி எதுவுமே இல்லை. கோயில் வாசலில் செருப்பை கழட்டி விட்டு சாமி கும்  பிட்டு வந்தால் செருப்பு காணாமல்  போய்விடுகிறது. வெளியூரில் இருந்து வரும் நாங்கள் சுமைகளை வைத்து கொண்டே சாமி கும்பிட வேண்டி  யுள்ளது. பொருட்களை வைத்து செல்ல எந்த பாதுகாப்பு அறையும் கிடையாது. சரியான கழிப்பிட வசதியில்லாததால் திறந்த வெளியையே  பயன்ப  டுத்த வேண்டியுள்ளது, என்றார்.  கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் கூறுகையில், காலணி பாதுகாப்பு அறையில் ஒரே ஒரு ஊழியர் தான்   பணியில் உள்ளார். ஆக்கிரமிப்பு கடைகள் விரைவில் அகற்றப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !