உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மையார்குப்பம் அன்னியம்மனுக்கு ஆடி பொங்கல்!

அம்மையார்குப்பம் அன்னியம்மனுக்கு ஆடி பொங்கல்!

ஆர்.கே.பேட்டை: அம்மையார்குப்பம் அன்னியம்மன் மற்றும் வங்கனுார் பச்சையம்மனுக்கு, நேற்று, ஆடி பொங்கல் வைத்து, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.  வேலுார் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே, சேரி அய்யம்பேட்டையில், அன்னியம்மன் கோவில் உள்ளது. இதன் உப கோவில்களாக, வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பத்திலும் அன்னியம்மன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அம்மையார்கு ப்பம்  மோசூர் சாலையில் உள்ள அன்னியம்மன் கோவிலில், நேற்று, ஆடி பொங்கல் திருவிழா நடந்தது.  காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிற  ப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 3:00 மணியளவில், கோவில் வளாகத்தில் பெரியாண்டவர் மண் சிலை வடிவமைக்கப்பட்டு,   சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.இதே போல், வங்கனுார் பச்சைய ம்மன்  கோவிலில், நேற்று, ஆடி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.  இதில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தனர்.   மாலையில், மாவிளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !