விநாயகர் சிலை செய்யும் பணிகள்.. இரவு பகலாக தீவிரம்!
திருவெண்ணெய் நல்லூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணியில், இரவு பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி பி ரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுர்த்தி தினத்தன்று மக்கள், தங்களின் தகுதிக்கேற்ப விநாயகரின் சிலைகளை வைத்து குறைந் தபட்சம் மூன்று நாட்கள் வழிபாடு நடத்தி கடல், ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கின்றனர். வரும் செப்.17ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வ ருவதால் தொழிலாளர்கள் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்திலிங்கமடத்தில் பிரத்யேக முறையில் 1 அடி முதல் 15 அடி உயரம் வரை சிலை தயாரிக்கும் பணி நடக்கிறது. சிலைகள் 200 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக் கிறது. இயற்கையான முறையில் மரவள்ளிக்கிழங்கு மாவு, பேப்பர் மற்றும் களிமண்ணினால் செய்யப்படும் இச்சிலைகள் கர்நாடகா, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல் வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தயாரிக்கப்பட்ட நுõற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் குடோன்களில் வைக்கப்பட்டுள் ளது. சித்திலிங்கமடத்தில் ஜெகநாதன், சுப்ராயன், ராமலிங்கம், தண்டபாணி சகோதரர்கள் சிலை தயாரிப்பு பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரு வதாகவும், அரசு அறிவித்தபடி சுற்றுசூழலுக்கு மாசு இல்லாத வகையில் இயற்கைமுறையில் சிலைகளை செய்வதாகவும், ஜனவரி மாதத்தில் சிலை தயாரிப்பு பணிகள் துவங்கி, தற்போது முழுவீச்சில் பணிகள் நடப்பதால் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி இம்மாத இறுதியில் நடக்குமெனவும் தெரிவித்தனர். இதேப்போல் அரசூர், டி.எடையார், தொட்டிக்குடிசை, பையூர், ஆற்காடு மற்றும் விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.