உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வெட்டிய வாழையில் குலை: மக்கள் கும்பிட்டு பூஜை!

பழநியில் வெட்டிய வாழையில் குலை: மக்கள் கும்பிட்டு பூஜை!

பழநி : பழநியில் வெட்டிய வாழை மரத்தில் குலை தள்ளியுள்ளதால், மக்கள் பூஜை செய்தனர். பழநி அருகே ஆயக்குடி ஐ.டி.ஓ., மேல்நிலைப்பள்ளி பின் புறம் உள்ளது, குறிஞ்சி நகர். இங்கு வசிக்கும் திருநாவுக்கரசு என்பவரது வீட்டில் வாழை மரம்(பூவன்) வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் 8 ல் குறிஞ்சி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வாழைமரம் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட வாழை மரத்தில் (அரை அடி உயரமே) இருந்து முதலில் மொட்டு போல் வெளி வந்தது. பின்னர் குலை தள்ளியது. வாழை மரத்தில் ஒரு இலை கூட இல்லை. இது அதிசயமான ஒன்று என பொதுமக்கள் கூறுகின்றனர். இதை கேள்விப்பட்ட பலரும், இந்த அதிசய வாழை மரத்தை கும்பிட்டு, பூஜை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !