உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை!
ADDED :3765 days ago
தஞ்சாவூர்: தஞ்சை, மேலவீதி கமாட்சியம்மன் திருமண்டபத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ஸ்ரீதர், மாநிலத் துணைத்தலைவர் வாசுதேவன், மாநிலப்பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில மகளிர் அணி முன்னாள் செயலாளர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.