உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலம்பியம்மன் கோவிலில் 14ம் தேதி செடல் உற்சவம்!

சிலம்பியம்மன் கோவிலில் 14ம் தேதி செடல் உற்சவம்!

புதுச்சத்திரம்: சிலம்பிமங்களம் சிலம்பியம்மன் கோவிலில் வரும் 14ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. சிலம்பிமங்களம் சிலம்பியம்மன் கோவி லில் ஆடி மாத செடல் உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியுடன்  துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு  தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் வரும் 14ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8:00  மணிக்கு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 10:00 மணிக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் சார்பில் பால்குடம் எடுத்தலும் நடக்கிறது.  மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவமும், 5:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !