திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆக.18ல் தெப்ப உற்சவம்!
ADDED :3709 days ago
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் வரும் 18ம் தேதி ஆடி தெப்ப உற்சவம் நடக்கிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடி தெப்ப உற்சவ விழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் திருவிழா வரும், 16ம் தேதி நடக்கிறது. அன்று அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.வரும், 18ம் தேதி ஆடி தெப்ப உற்சவம் நடக்கிறது. தெப்ப உற்சவத்தின் போது ஸ்வாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் முல்லை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.