திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆக.,15ல் பொது விருந்து
ADDED :3821 days ago
திருச்சி,:சுதந்திர தினத்தையொட்டி, வரும், 15ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடக்கிறது.கோவில் இணை கமிஷனர் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:சுதந்திர தினத்தையொட்டி வரும், 15ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் கோவில் பகல், 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. தொடர்ந்து, கோவில் புதிய திருமண மண்டபத்தில், பொது விருந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், கலெக்டர், மாவட்ட எஸ்.பி., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.