திருப்பதிக்கு வரவழைப்பது ஏன்?
ADDED :3717 days ago
கண்ணனின் குணநலன் பற்றி ஆண்டாளை விட சிறப்பாக அலசியவர்கள் யாரும் இருக்க முடியாது. அவள் கண்ணனைப் பாடும்போது, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என குறிப்பிடுகிறாள். தன்னை வெறுப்பவர்களின் மனதைக்கூட வென்று விடுபவன், என்பது இதன் பொருள். தனக்கு எதுவுமே தராதவர்களாக இருந்தாலும், அவர்களது வீட்டிற்குள் நுழைந்து அவர்களின் மனதை திருடுவான். இதை குறிக்கவே, கோகுலத்தில் தன்னை விரட்டிய கோபியர்களின் வீட்டிற்குள் புகுந்து வெண்ணெய் திருடினான். பக்தர்களை வலுக்கட்டாயமாக தன் வீடான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே, அவன் இத்தகைய லீலைகளை செய்கிறான். அவன் கோவிந்தனாக அவதாரம் செய்ததிருப்பதிக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து, நம்மிடமுள்ள காசு, பணம் மற்றும் தலைமுடியைக் குறைப்பதன்மூலம் அகங்காரத்தை அகற்றி, நம்மை பக்தி பாதைக்குள் இழுக்கும் பணியைச் செய்கிறான்.