உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா துவங்கியது!

மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா துவங்கியது!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.விழாவில் ஆக., 16ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உச்சிகால பூஜை வேளையில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் வைபவம் நடக்கிறது. ஆக., 24ல் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.33 முதல் 7.57 மணிக்குள் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆக., 26ல் சுவாமி கோயிலில் இருந்து புட்டுத்தோப்பிற்கு எழுந்தருள்வார். புட்டுத்தோப்பு மண்டபத்தில் மதியம் 3.22 முதல் 3.46 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மண்சாத்துதலும் நடக்கிறது. புட்டுத்திருவிழா முடிந்து கோயிலுக்குள் சுவாமி வரும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.ஆக., 30ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் புறப்பாடாகி, கோயிலின் அலுவலக மண்டகப்படிக்கு எழுந்தருளி தீபாராதனை நடக்கும்.திருவிளையாடல்: ஆக., 18: கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். ஆக., 19: நாரைக்கு முக்தி கொடுத்தல். ஆக., 20: மாணிக்கம் விற்றது. ஆக., 21: தருமிக்கு பொற்கிழி அளித்தது. ஆக., 22: உலவாக்கோட்டை அருளியது. ஆக., 23: பாணனுக்கு அங்கம் வெட்டியது. ஆக., 24: வளையல் விற்றது. ஆக., 25: நரியை பரியாக்கியது. ஆக., 26: பிட்டுக்கு மண் சுமந்தது. ஆக., 27: விறகு விற்றது திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !