உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் அம்மனுக்கு வளையல் அலங்காரம்!

திருவள்ளூர் அம்மனுக்கு வளையல் அலங்காரம்!

திருவள்ளூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று, ஆடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து, இங்குள்ள பூங்குழலி அம்பாள், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின், 15 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள, தீர்த்தீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !