நல்லாண் பிள்ளை பெற்றாள் கோவிலில் ஆடி மாத உற்சவம்!
ADDED :3805 days ago
செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் திரவுபதியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா நல்லாண் பிள்ளை பெற்றாள் திரவுபதியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் கடந்த 15ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் திரவுபதியம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் சாமி வீதி உலா நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் குலசேகரன், துரைராஜன், எத்திராஜன், ரகுபதி மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.