உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரவன்பட்டியில் மகோத்ஸவ தேரோட்டம்

வைரவன்பட்டியில் மகோத்ஸவ தேரோட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில் ஆடி மகோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி கணபதி ஹோமம்,யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. மாலை காப்பு கட்டி உற்சவம் நடந்தது. தினமும் காலை வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் வயிரவர் சுவாமி புறப்பாடும் நடந்தது. நேற்று மாலை 4:10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இரவு திருத்தேர் சென்ற பாதையில், மீண்டும் வயிரவர் திருவீதி உலா வந்து வடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக.,17)பகல் 12 மணிக்கு தீர்த்த வாரி <உற்சவம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். இரவு 8 மணிக்கு வயிரவர் பூப்பல்லக்கில் எழுந்தருள்வார். ஆகஸ்ட் 18 அன்று பஞ்சமூர்த்திகள், வயிரவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !