சாரபரமேஸ்வரர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை!
ADDED :3738 days ago
கும்பகோணம்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில், ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று, ஞானாம்பிகைக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 1,008 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகளை, ஆலய அர்ச்சகர்கள் சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் நிர்மலாதேவி, நிர்வாக அதிகாரி ஞானசேகரன் ம்ற்றும் ஆலய பணியாளர்கள் செய்தனர்.