மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் தேர் திருவிழா
ADDED :3738 days ago
மன்னார்குடி: மன்னார்குடி, ராஜகோபால ஸ்வாமி கோவிலில் நடந்த ஆடிப்பூர தேர் திருவிழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில், ஆடிப்பூர தேர்திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவிலில் செங்கமலத்தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்த பின், பூஜைகள் செய்யப்பட்டு, காலை, 6,30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். மதியம், 2.30 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.