மாசாணி அம்மன் கோயிலில் கிடா வெட்டு பூஜை
ADDED :3738 days ago
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டியில் மாயக்காரி மாசாணி அம்மன் பக்தர்கள் பீடம் அமைந்துள்ளது. இங்குள்ள 108 கருப்பணசாமிகளுக்கு ஆடி மாதத்தில் கிடா வெட்டு பூஜை நடக்கும். நேற்று கிடா வெட்டப்பட்டு 108 கருப்பணசாமிகளுக்கு படையல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாசாணி அம்மனுக்கும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஞாயிறு, அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மாசி மாதம் கடைசி வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் இரவில் 11 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு அருள் வாக்கும் சொல்லப்படுகிறது. இங்கு மகா இடிகாளி, பேச்சியம்மன் கோயில், ராக்காச்சி அம்மனும் உள்ளன. தியான மண்டபத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது.