உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் சிவாலயங்களில் ஆடிப்பூர தீர்த்தவாரி

கும்பகோணம் சிவாலயங்களில் ஆடிப்பூர தீர்த்தவாரி

கும்பகோணம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மகாமககுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. நேற்று, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கும்பகோணம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவில், காசிவிஸ்வநாதர் கோவில்களிலிருந்து ஆடிப்பூர அம்மன் புறப்பாடாகி நகர வீதிகள் வழியாக காசிவிஸ்வநாதர் கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்களுக்கு நல்லெண்ணெய், சீயக்காய் கொடுக்கப்பட்டது. பின்னர், புது வளையல்கள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. விவசாயம் செழிக்க பக்தர்கள் புதுநாற்று, புதுநெல் கொண்டு வந்து படையலிட்டனர். மகாமக குளத்தின் கரைகளில் மங்களாம்பிகை அம்பாள், காசிவிசாலாட்சி அம்பாளும் எழுந்தருளினர். அப்போது, இரு கோயிலின் அஸ்திரதேவர்களுக்கும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி தீர்த்தவாரி கண்டனர். பக்தர்களும் குளத்தில் நீராடினர். அதன் பின், அம்பாள் வீதியுலாவாக கோவிலை சென்றடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !