உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

பிடாரி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவள்ளூர்:திருவள்ளூர் பிடாரி பொன்னியம்மன் கோவிலில், நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.திருவள்ளூர், நேதாஜி சாலையில், பிடாரி பொன்னியம்மன் கோவிலில், நேற்று, முதலாம் ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தீபாராதனை நடந்தது. இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவிக்குப்பம் கடம்பத்துார் அருகே, தேவி அம்மன் கோவிலில், நேற்று மூன்றாமாண்டு பால்குட அபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் அருகே அமைந்துள்ளது ஸ்ரீதேவிக்குப்பம். இங்குள்ள ஸ்ரீதேவி அம்மன் கோவிலில், இரு ஆண்டுகளாக ஆடி மாதம் பால்குட அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும், பால்குட அபிஷேகம் நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. முன்னதாக, பக்தர்கள், காலை, 8:30 மணிக்கு இதே பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலிருந்து, பால்குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில், கடம்பத்துார், ஏகாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், ஸ்ரீதேவி அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !