உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி உற்சவம்

திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி உற்சவம்

கடலூர் : கடலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.கடலூர், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் கர ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருமஞ்சனம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 3ம் தேதி குத்துவிளக்கு பூஜை நடந்தது. 13ம் தேதி திருக்கல்யாணம், 14ம் தேதி காலை திருமஞ்சனம், மதியம் கண்ணபிரான் ஊஞ்சல் சேவை நடந்தது.முக்கிய விழாவாக 15ம் தேதி மாலை தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வீதியுலா நடந்தது. 16ம் தேதி மாலை கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !