திருக்கோவிலூரில் கபிலர் விழா துவங்கியது
ADDED :5190 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் 36ம் ஆண்டு கபிலர் விழா நேற்று சென்னை தமிழிசைச் சங்க இசைக் கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 36ம் ஆண்டு கபிலர் விழா நேற்று காலை 8 மணிக்கு சுப்ரமணி மஹாலில் துவங்கியது. சென்னை தமிழ் இசைச் சங்க, இசைக் கல்லூரி நாதஸ்வர தவில் துறை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு குரலிசை ஆசிரியர்களின் தெய்வத் திருப்பாடல்கள் இசை அரங்கம், பகல் 12 மணிக்கு சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் இசை அரங்கம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு நாதஸ்வர இசை அரங்கம், 6 மணிக்கு ஹரிஹரசுப்பிரமணியனின் திருமுறை இசை அரங்கம், 7 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது.