தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா
ADDED :3821 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரலியநாயகி அம்மன் கோவிலில், அமாவாசை திருவிழா நடந்தது. காலையில் அம்மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு தீச்சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவபாண்டலம் பருவதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.