உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலய தேர் பவனி

காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலய தேர் பவனி

காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலய விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலை 5.30 செபமாலையும், 6 மணிக்கு திருப்பலியும், நடந்தது. 9ம் திருநாளான நேற்று மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. தென் தமிழக கப்புச்சின் மறை மாநில அதிபர் ஜான் அருமைநாதன் மறையுரை ஆற்றினார். பங்கு தந்தை வின்சென்ட் அமல்ராஜ் நன்றி கூறினார். நேற்று காலை திருப்பலி முடிந்ததும் சகாயமாதா திருத்தேர் பவனி டி.டி.,நகர், நூறடி ரோடு,செக்காலை ரோடு, கல்லூரி சாலை வழியே ஆலயம் வந்தது. பங்கு பேரவையினர், பணிக்குழுக்கள், பங்கு மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !