செஞ்சி மாரியம்மனுக்கு பூபல்லக்கு உற்சவம்!
ADDED :3741 days ago
செஞ்சி: செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில், செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு 27வது ஆண்டு ஆடிப்பூர விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு சத்திரத்தெரு அங்காளம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வந்தனர். முற்பகல் 11:00 மணிக்கு 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன், பி ரம்மாண்டமான பூ பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. இதில் நய்யாண்டி மேளம், கரகாட்டம் ஆகியன நடந்தன.