பெங்களூரு பசவ பவனில் ருத்ராட்ச கண்காட்சி!
பெங்களூரு: பெங்களூரு பசவ பவனில், ருத்ராட்சை அணிவதால் ஏற்படும் பலன்களையும் விளக்கும் ருத்ராட்சை கண்காட்சி மற்றும் விற்பனையை, தேசிய அளவில் பிரபலமான மும்பையை சேர்ந்த அமைப்பு நடத்துகிறது. இந்த கண்காட்சிக்கு வருவோர், ருத்ராட்சை அணிவதற்கான பலன்களை யும்; உண்மையான ருத்ராட்சையை எப்படி கண்டுபிடிப்பது; யார் யார் அணியலாம்; அதனால் உடல்நிலை, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? எத்தனை முகங்கள் கொண்ட ருத்ராட்சைகள் கிடைக்கின்றன; அதன் மருத்துவ குணம் என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கும் இலவச ஆலோசனை வழங்குகின்றனர். ருத்ராட்சம் அணிந்ததால் பயன்பெற்ற பலர், தங்கள் அனுபவங்களை கூறியிருப்பதும், இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும், பல்வேறு நாடுகளில் கிடைக்கும் அரிய வகை ருத்ராட்சைகள் இடம் பெற்றிருப்பதுடன், விற்பனைக்கும் கிடைக்கும். சோபியா பள்ளி எதிரில், பசவேஸ்வரா சர்க்கிளில் உள்ள பசவ பவனில், இக்கண்காட்சி நாளை வரை நடக்கிறது; அனுமதி இலவசம். காலை, 10:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணி வரை ஆலோசனை பெறலாம்.