அருந்ததியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
ADDED :3744 days ago
புவனகிரி: புவனகிரி அருந்ததியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செயப்பட்டு வீதியுலா நடந்தது. 14ம் தேதி சாகை வார்த்தல் விழாவையொட்டி பக்தர்கள் சக்தி கரகத்துடன் வீதியுலா வந்தனர். முன்னதாக பக்தர்கள் அலகு குத்தி பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.