உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம் லலிதா சகஸ்ர நாம யாகம்!

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம் லலிதா சகஸ்ர நாம யாகம்!

பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி பூரத்தை தொடர்ந்து, வேதநாயகி அம்மனுக்கு, 1,008 பால்குட அபிஷேகமும், உலக நன்மை வேண்டி சகஸ்ர நாம யாகமும் நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு கணபதி பூஜையுடன், லலிதா சகஸ்ர நாம யாகம், சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாலாஜி சிவம் தலைமையில் துவங்கி, மதியம், 12 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும் நடந்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், குமாரபாளையம் உட்பட பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மூலம், 1,008 பால்குட அபிஷேகம், வேதநாயகி அம்மனுக்கு நடந்தது. பின், அலங்கார மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !