ராஜசோளீஸ்வரி கோவிலில் அபிராமி அம்மன் வீதியுலா!
ADDED :3744 days ago
காரைக்கால்: திருப்பட்டினம் ராஜசோளீஸ்வரி கோவிலில் மின் அலங்கார பல்லக்கில் அபிராமி அம்மன் வீதியுலா நடந்தது. காரைக்கால் திருப் பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரர் கோவிலில் கடந்த 7ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது.9 நாட்கள் முக்கிய நிகழ்ச்சிய õக ஆடிப்பூர் விழா நடந்தது. கடந்த 15ம்தேதி அபிராமி அம்மனுக்கு சிறப்புயாகம் மற்றும் அபிஷேகம் இரவு சஹஸ்ரநாம அர்ச்சனை, அம்மனுக்கு மகா அபி÷ஷ்கம் தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் மின் அலங்கார பல்லக்கில் திருவீதியுலா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மளுக்கு பல வகை பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை அபிராமி அம்மன் ÷ தவஸ்தானம் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.