உடுமலை மாரியம்மன் கோவிலில் நாக சதுர்த்தி பூஜை!
ADDED :3744 days ago
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், அஷ்டநாகர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவில் வளாகத்தில், அஷ்டநாகர்கள் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். நாக சதுர்த்தி முன்னிட்டு, அஷ்டநாகர்களுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், அஷ்டநாகர் கலச ஆவாஹன பூர்வாங்க பூஜை, அக்னி காரியம் திரவியாகுதி, தீபாராதனையும், காலை, 9:00 மணிக்கு, அஷ்டநாகர் கலச அபிேஷகம், அலங்காரம், நாம அர்ச்சனை, மகா தீபாராதனையும் நடந்தது. குடும்ப ஒற்றுமை, நாகதோஷம் நீங்கி திருமணம் கைகூடுதல், காலசர்ப்ப தோஷம் நீங்குதல், மாங்கல்ய பலம் பெறுதல் வேண்டிய, ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.