ஆண்டாள் – ரங்கமன்னார் கோவில் தேரோட்டம்!
ADDED :3744 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள்–ரங்கமன்னார் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி திருத்தேரில், ஆண்டாள்–ரங்கமன்னார் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருத்தேர் கோவில் வளாகத்தில் துவங்கி காளிபாளையம், வெள்ளமடை, சாமநாயக்கன்பாளையம் வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது. விழாவையொட்டி திருக்கல்யாணம், அலங்கார பூஜை, திருமஞ்சனம், உபசார பூஜைகள் நடந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.