கோட்டை கருப்பணசாமி உண்டியலில் ரூ.4.21 லட்சம்
ADDED :3720 days ago
வத்தலக்குண்டு : விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் கிடா வெட்டுத் திருவிழாவையொட்டி, கோயில் உண்டியல் வசூலாக ரூ.4.21 லட்சம் கிடைத்தது. விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா ஆடி அமாவாசையன்று நடந்தது. இக்கோயில் உண்டியல் திருவிழாவிற்கு முன் ஜூலை 31ல் எண்ணப்பட்டது. அப்போது 68 ஆயிரத்து 976 ரூபாய் இருந்தது. ஆக.14ல் ஒரு நாள் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா முடிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. செயல் அலுவலர்கள் ராஜா, தக்கார் சுதா, எழுத்தர் பாஸ்கரன்<, கிராமத்தினர் இருந்தனர். 15 நாட்களில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 183 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.