விருத்தாசலம் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு!
ADDED :3907 days ago
விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம், மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் போன்ற பொருட்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முகசுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள் குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. அதேபோல், வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.