உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் விழா

முத்துமாரியம்மன் கோவில் விழா

சிதம்பரம் : சிதம்பரம் அருகே நடராஜபுரம் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. சிதம்பரம் அருகே நடராஜபுரம் கிராமத்தில் கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பவுர்ணமி உற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது.தினமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா மற்றும் அபிஷேக, ஆராதனைகள், நாடகம் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !