உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண வெங்கடரமண கோவிலில் ஆக. 26ல் திருப்பவித்ரோத்ஸவ விழா

கல்யாண வெங்கடரமண கோவிலில் ஆக. 26ல் திருப்பவித்ரோத்ஸவ விழா

கரூர்: கரூர், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், ஆகஸ்ட், 26ம் தேதி முதல், 28ம் தேதி வரை, திருப்பவித்ரோத்ஸ்வ விழா நடக்கிறது. ஆகஸ்ட், 26ம் தேதி மாலை, 5 மணி முதல் ஆச்சார்யவர்னம், விசேஷ ஆராதனை, பகவத் ப்ரார்த்தனை, வேதாரம்பம், ப்ரபந்த தொடக்கம், யஜமான ஸங்கல்பம், புண்யாகம், அக்னி மதனம், வாஸ்து சாந்தி, இரவு, 7 மணிக்கு ம்ருத்ஸங்கஹணம்,அங்குரார்பணம், பஞ்சகவ்ய ப்ரோக்சணம், அக்னி பிரதிஷ்டை, இரவு 8 மணிக்கு ஸயனாதிவாசம், ஹெளத்ரம், இரவு, 10 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. மறுநாள், 27ம் தேதி காலை, 7.35 மணிக்கு புன்யாஹம், அக்னிப்ரணம், கும்ப ஆராதனம், மகாசாந்திஹோமம், பவித்ரஜப்யம், ப்ரதான ஹோமம், பகல், 12 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை, 6.30 மணிக்கு கும்ப ஆராதனம், மகாசாந்தி ஹோமம், ப்ரதான ஹோமம் நடக்கிறது. 28ம் தேதி காலை, 6 மணிக்கு புண்யாஹம், அக்னிப்ரணயனம், கும்ப ஆராதனம், ப்ரதான ஹோமம், மகாபூர்ணாகுதி, அக்னி சமாரோபணம், காலை, 9 மணி முதல், 10 மணிக்குள் கடம்பெருமாள் திருவீதி புறப்பாடு, திருவாராதனம், மகாதிருப்பாவாடை நைவேத்யம், புஷ்பாஞ்சலி, ப்ரம்மகோஷம் சாற்றுமுறை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !