உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவங்கியது

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவங்கியது

சேலம்: சேலம், அம்மாபேட்டை மெயின் ரோடு, சவுந்திரவல்லி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஏழாம் ஆண்டு, திருப்பவித்ர உற்சவம் இன்று (ஆக., 24) துவங்குகிறது.சேலம், சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை, 6 மணிக்கு அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, பிபரபந்த சேவையுடன், இன்று துவங்கி, ஐந்து நாட்கள் திருப்பவித்ர உற்சவம் நடக்கிறது.நாளை, (ஆக., 25) காலை, 7 மணிக்கு, அக்னி பிரதிஷ்டை, பவித்ர பிரதிஷ்டை உள்ளிட்ட ஹோமங்கள் துவங்கி, ஸ்வாமிகளுக்கு, பவித்ர மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு ஹோமம், 60 திருவாராதனம் தீர்த்த பிரசாதம் வழங்குதல் போன்றவை, நான்கு நாட்களும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை, வரும், 28ம் தேதி, காலை, 5 மணிக்கு நடக்கிறது. அன்று, பெருமாள் பெரிய கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு நடக்கிறது. மேலும், மூலவர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு தங்க கவசமும், உற்சவர் பெருமாள் தாயாருக்கு ரத்ன அங்கியும் சார்த்தப்படவுள்ளது.தொடர்ந்து, திருமஞ்சனமும், பகல், 12 மணிக்கு பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !