உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்!

திருத்தணி முனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்!

திருத்தணி: முனீஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருத்தணி தாலுகா, நாபளூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னத்துார் கிராமத்தில், புதியதாக முனீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, நேற்று, மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலையில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !