உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பிட்டுத் திருவிழா

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பிட்டுத் திருவிழா

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆவணி மூல நட்சத்திரம் பிட்டுக்கு மண்சுமந்த திருநாளை முன்னிட்டு சிவபெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிட்டுத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கும்ப கலசங்கள் வைத்து யாகபூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து பகல் 2 மணிக்கு வையாபுரிகுளத்துகரை பதிரிப்பிள்ளையார் கோயிலில் சிவாச்சாரியர்கள் மூலம் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. தங்ககுதிரை வாகனத்தில் சிவன்பெருமான் ஆவணி மூல வீதி வழியாக திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !