திருவள்ளூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!
ADDED :3725 days ago
திருவள்ளூர்: திருவள்ளூரில், பெருமாள் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்த, கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் உடைத்து, உள்ளேயி ருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். ஒன்பது மாதமாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. ஏற்கனவே, இக்கோவிலில், இரண்டு முறை உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.