உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி: மோ.வன்னஞ்சூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரில்,  ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா  இன்று (27ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி கடந்த 25ம் தேதி பூர்வா ங்க பூஜையுடன் துவங்கி, முதல் நாள் பூஜையாக பகவத்பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், கும்பஸ்தாபனம் ஆராதனை நடந்தது.  தொடர்ந்து  இரண்டாவது நாளான நேற்று யாகசாலை பூஜைகள், கலசஸ்தாபனம், பூர்ணாஹீதி மங்கள ஆர்த்தி நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு  கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக வைபோகத்தை ரகுநாதர் பட்டாட்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர். விழா  ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேக  விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !