உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்காளியம்மன் கோவிலில் ஆக., 31 கும்பாபிஷேக விழா கோலாகலம்

பொன்காளியம்மன் கோவிலில் ஆக., 31 கும்பாபிஷேக விழா கோலாகலம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த கோனூரில், விநாயகர் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மதுரைவீரன், ராக்கியண்ணன், ராக்காயி, ராசாத்தி கவுண்டர், கவுண்டச்சி அம்மன் குதிரைவாகனம் மற்றும் பொன் காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், விமான ராஜகோபுரம் ஆகிய திருப்பணிகள், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து, ஆகஸ்ட், 31ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாளை (ஆக., 28) அதிகாலை, 5.30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை, காலை, 8 மணிக்கு காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்து வரச்செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை, 7 மணிக்கு, பஞ்சகவ்யம், சுதர்சன மற்றும் தன்வந்திரி ஹோமம், மாலை, 4 மணிக்கு, வாஸ்து பூஜை, முதல் கால பூஜை நடக்கிறது. 30ம் தேதி, காலை, 8.30 மணிக்கு, விசேஷசாந்தி, விநாயகர் வழிபாடு, மாலை, 6 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. வரும் 31ம் தேதி, காலை, 6 மணிக்கு, புண்யாகம், யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நான்காம் கால பூஜை, காலை, 9.30 மணிக்கு, கடம் புறப்பாடு, காலை, 10 மணிக்கு, விமான கோபுரம், விநாயகர், பொன் காளியம்மன் பரிவார சகதி மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள், குடிபாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !