விலகிய பலிபீடம்!
ADDED :5233 days ago
பலிபீடம், கொடிமரம், நந்தீஸ்வரரம் ஒரே நேர்கோட்டில் சுவாமி சன்னதிக்கு எதிரே அமையும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக சில கோயில்களில் கொடிமரமோ, நந்தி சன்னதியோ விலகியிருக்கும். ஆனால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில், பலிபீடம் வலது புறமாக இருக்கிறது. இவ்வூரில் வசித்த இடையர் குல பக்தர் ஒருவர், தர்ப்பாரண்யேஸ்வரரின் அபிஷேகத்திற்காக பால் தருவதில்லை என ஒரு கணக்காளர் மன்னனுக்கு தவறான தகவல் தந்தார். இதனால், சிவன் கோபமடைந்து கணக்காளர் மீது சூலத்தை வீசினார், அப்போது பலி பீடம் விலகி நின்றதாக தல புராணம் கூறுகிறது.