ஆழ்ந்த பக்தியை வேண்டுதல், மார்க்கண்டேய சரிதம்
1. த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி
புவநே ஹீந மத்யே உத்தமம் யத்
ஜ்ஞாநம் ச்ரத்தா ச கர்த்தா வஸதி: அபி ச
ஸுகம் கர்ம ச ஆஹார பேதா:
த்வத் ஷேத்ர த்வத் நிவேஷ ஆதி து யத் இஹ
புந: த்வத் பரம் தத் து ஸர்வம்
ப்ராஹு: நைகுண்ய நிஷ்டம் தத் அநுபஜநத:
மங்க்ஷு ஸித்த: பவேயம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள ஞானம், நம்பிக்கை (ச்ரத்தை), செய்பவன் (கர்த்தா), இருப்பிடம், இன்பம், செயல், உணவு போன்ற பல வகையானவையும் மூன்று குணங்களால் உண்டாகின்றன. அதனால் அவற்றுள் சில உயர்ந்தவை யாகவும் சில தாழ்ந்தவையாகவும், சில நடுத்தரமாகவும் உள்ளன. ஆயினும் உனது கோயிலையும் உன்னையும் உன்னிடம் முழுமையாக அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடன் வணங்குவது என்ற செயல் இந்த மூன்று குணங்களால் உண்டாக்கப்படாதவை என்று கூறுகின்றனர். (ஆகவே இதற்கு ஏற்றத்தாழ்வு இல்லை). ஆகவே இச்செயல் மூலம் நான் மோட்சம் பெறுவேன்.
2. த்வயி ஏவ சித்த: ஸுகமயி விசரந்
ஸர்வ சேஷ்டா: த்வதர்த்தம்
த்வத் பக்தை: ஸேவ்யமாநாந் அபி சரிதசராந்
ஆச்ரயந் புண்ய தேசாந்
தஸ்யௌ விப்ரே ம்ருக ஆதிஷு அபி
ச ஸம மதி: முச்யமாந அவமாந
ஸ்பர்த்தா அஸுயா ஆதி தோஷ: ஸததம்
அகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம்
பொருள்: குருவாயூரப்பா! எனது மனதை உன்னிடம் நான் அர்ப்பணம் செய்ய வேண்டும் சுகமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் (பல கோயில்களுக்கு). உன் பக்தர்கள் இப்போது செல்லும் கோயில்கள். முன்பு சென்ற கோயில்கள் ஆகியவற்றிக்குச் செல்ல வேண்டும். மேலும் தீய மனிதர்களிடமும், ப்ராமணர்களிடமும், விலங்குகளிடமும் சமமான புத்தி கொள்ள வேண்டும். மானம், அவமானம், பொறாமை, த்வேஷம் முதலானவை நீங்கியவனாக மாற வேண்டும். அனைத்து உயிர்களிலும் உன்னையே கண்டு வணங்க வேண்டும்.
3. த்வத் பாவ: யாவத் ஏஷு ஸ்புரதி ந விசநம்
தாவத் ஏவம் ஹி உபாஸ்திம்
குர்வந் ஐகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி
த்வந்மய: அஹம் சரேயம்
த்வத் தர்மஸ்ய அஸ்ய தாவத் கிம் அபி
ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாச
தஸ்மாத் ஸர்வாத்மநா ஏவ ப்ரதிச ம
விபோ பக்தி மார்க்கம் மநோஜ்ஞம்
பொருள்: குருவாயூரப்பா! பகவானே! அனைத்து உயிர்களிலும் நீயே உள்ளாய் என்ற சிந்தனை எனக்கு உண்டாகும்வரை நான் இப்படியே உன்னை வணங்குகிக் கொண்டிருப்பேன். பின்னர் எங்கும் உள்ள ஆத்மாக்கள் ஒன்று என்ற ஞானம் தோன்றியவுடன், நானே நீ; நீயே நான் என்று மாறிவிடுவேன். இப்படியான பாகவதநெறிக்கு அழிவில்லை. எனவே அனைத்து வழிகளிலும் உள்ளம் கவரக்கூடிய பக்தியை நீ எனக்கு அளிப்பாய்.
4. தம்ச ஏநம் பக்தியோகம் த்ரடயிதும்
அயிமே ஸாத்யம் ஆரோக்யம் ஆயு:
திஷ்ட்யா தத்ர அபி ஸேவ்யம் தவ சரணம்
அஹோ போஷஜாய ஏவ துக்தம்
மார்க்கண்டேய: ஹி பூர்வம் கணக நிகதித
த்வாதச அப்த ஆயு: உச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ பட
நிவஹை: த்ரா வயாமாஸ ம்ருத்யும்
பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் கொண்ட பக்தியோகம் என்பது திடமாக வளர வேண்டுமானால் எனக்கு உடலில் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தேவையாக உள்ளது. அதனைப் பெறவும் உனது திருவடியையே நாடவேண்டும் என்பது பாலே மருந்தாக உள்ளது போன்று வியப்பே! முன்பு ஒரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவனுக்கு ஆயுட்காலம் பன்னிரண்டு வருடம் மட்டுமே என்று ஜோதிடர்கள் கணித்தனர். அவன் உன்னை ஓர் ஆண்டு முழுவதும் துதித்தான். அதன் விளைவாக அவன் உனது தூதர்களின் துணை கொண்டு யமனை விரட்டினான் அல்லவா?
5. மார்க்கண்டேய: சிர: ஆயு: ஸ கலு
புந: அபி த்வத்பர: புஷ்ப பத்ரா
தீரே நிந்யே தபஸ்யந் அதுல ஸுக
ரதி: ஷட் து மந்வந்தராணி
தேவேந்தர: ஸப்தம: தம ஸுர யுவதி
மருந் மந்மதை: மோஹயிஷ்யந்
யோக ஊஷ்ம ப்லுஷ்யமாணை: ந
து புந: அசகத் த்வத் ஜநம் நிர்ஜயேத் க:
பொருள்: குருவாயூரப்பா! அந்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுள் பெற்றவனாக, உன்னையே வணங்கி வந்தான். ஈடு இல்லாத ஆனந்தம் அடைய எண்ணியவனாய், புஷ்பபத்ரா என்ற நதிக்கரையில் தவம் செய்து ஆறு மன்வந்த்ரம் இன்பம் பெற்றான். ஆனால் ஏழாவது மன்வந்த்ரத்தின் போது இந்திரன் தேவேலாகப் பெண்கள், மன்மதன், தென்றல் காற்று ஆகியவற்றின் உதவியுடன் அவன் தவத்தைக் கலைத்து அவனை மயக்க முயன்றான். ஆனால் அவனது தவத்தின் தீயானது வந்தவர்களை எரித்தது. இப்படியாக உனது பக்தர்களை யாரால் வெல்ல இயலும்?
6. ப்ரீத்யா நாராயண ஆக்ய: த்வம் அத
நர ஸக: ப்ரா ப்தவாந் அஸ்ய பார்ச்வம்
துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து
விவிதவரை: லோபித: ந அநுமேநே
த்ரஷ்டும் மாயாம் த்வதீயம் கில புந:
அவ்ருணோத் பக்தி த்ருப்த அந்தராத்மா
மாயா துக்க அநபிஜ்ஞ: தத் அபி
ம்ருகயதே நூநம் ஆச்சர்ய ஹேதோ:
பொருள்: குருவாயூரப்பா! நீ நராநாராயணனாக அவதரித்தபோது நீயும் உனது தோழனான நரனும் மார்க்கண்டேயனிடம் சென்றீர்கள். அவன் மிகவும் மகிழ்ந்தவனாய் உன்னைப் பலவாகத் துதித்தான். அப்போது நீ அவனுக்குப் பல வரங்கள் அளிக்கப் போவதாக ஆசை மூட்டினாய். ஆனால் அவன் அவற்றை விரும்பவில்லை. ஆயினும் அவன் உனது மாயை என்றால் என்ன என்று காண விரும்பினான். மாயையால் உண்டாகும் துன்பங்களை அறியாத காரணத்தால், அதனால் உண்டாகும் துன்பத்தை அறிய வேண்டியே இப்படிக் கேட்டான் அல்லவா?
7. யாதே த்வயி ஆசு வாத ஆகுல ஜலத
கலத் தோய பூர்ண அதி கூர்ணத்
ஸப்தார்ணோ ராசி மக்நே ஜகதி ஸ
து ஜலே ஸம்ப்ரமந் வர்ஷ கோடீ:
தீந: ப்ரைக்ஷிஷ்ட தூரே வட தள
சயநம் கஞ்சித் ஆச்சர்ய பாலம்
த்வாம் ஏவ ச்யாமள அங்கம் வதந
ஸரஸிஜ ந்யஸ்த பாத அங்குலீகம்
பொருள்: குருவாயூரப்பா! நீ அப்படியே வரம் அளித்துவிட்டு மறைந்தாய். நீ சென்றதும் பலத்த காற்றுடன் சூழ்ந்த மேகங்கள் மழையைக் கொட்டத் தொடங்கின. இதனால் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து இந்த உலகம் எங்கும் நீர்மயமாக ஆனது. மார்க்கண்டேயன் மட்டும் அந்த நீரில் பல கோடி ஆண்டு தனியாக வருந்தியபடி இருந்தான். அப்போது அவனுக்குக் கிடைத்த காட்சி - நீ ஓர் அற்புதமான சிறு குழந்தையாக ஆலிலை மேல் படுத்துக் கிடந்தாய். நீல நிறமான உடல் கொண்டும், தாமரை மலர் போன்ற அழகிய முகத்தில் காலின் கட்டை விரலை வைத்துக் கிடந்தாய். இதனைக் கண்டான் அல்லவா?
8. த்ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்ட ரோமா
த்வரிதம் உபகத: ஸ்ப்ரஷ்டுகாம: முநீந்த்ர:
ச்வாஸேந அந்த: நிவிஷ்ட: புந: இஹ
ஸகலம் த்ருஷ்டவாந் விஷ்டப ஓகம்
பூய: அபி ச்வாஸ வாதை: பஹி:
அநுபதித: வீக்ஷித: த்வத் கடாக்ஷை:
மோதாத் ஆச்லேஷ்டு காம: த்வயி
பிஹித தநௌ ஸ்வ ஆச்ரமே ப்ராக்வத் ஆஸீத்
பொருள்: குருவாயூரப்பா! இப்படியான உனது தரிசனத்தால் மார்க்கண்டேயன் மெய் சிலிர்த்தான். உனது அழகிய உடலைத் தொட எண்ணியவனாக உன் அருகில் வந்தான். உனது மூச்சுக்காற்று மூலமாக உன்னுள் இழுக்கப்பட்டு உள்ளே சென்று விட்டான். குழந்தையான உனது உடலில் அவன் உலகம் அனைத்தையும் கண்டான். மீண்டும் உனது மூச்சு மூலம் வெளியில் வந்தான். உனது கருணை பொங்கும் பார்வை மூலம் அவனைக் கண்டாய். அவன் மிகவும் மகிழ்ந்து உன்னை ஆரத்தழுவிக் கொள்ள விருப்பம் கொண்டபோது, நீ மறைந்து விட்டாய். அந்த நேரம் தனது ஆச்ரமத்தில் அவன் மீண்டும் இருந்தான்.
9. கௌர்யா ஸார்த்தம் தத் அக்ரே புரபித்
அத கத: த்வத் ப்ரிய ப்ரேக்ஷணார்த்தீ
ஸித்தாந் ஏவ அஸ்ய தத்வா ஸ்வயம்
அஜராம்ருத்யுத ஆதீந் கத: அபூத்
ஏவம் த்வத் ஸேவயா ஏவ ஸ்மர ரிபு:
அபி ஸம்ப்ரீயதே யேந தஸ்மாந்
மூர்த்தி த்ரஸி ஆத்மக: த்வம் நநு ஸகல
நியந்தா இதி ஸவ்யக்தம் ஆஸீத்
பொருள்: குருவாயூரப்பா! அப்போது சிவன் உனது பக்தனைக் காண விரும்பி, பார்வதியுடன் இணைந்து மார்க்கண்டேயன் முன்பாக வந்தார். தனது தவத்தின் மூலமாக மார்க்கண்டேயனுக்கு முதுமையும் மரணமும் இல்லாமல் இருந்தது. ஆயினும் சிவன் அதனை ஒரு வரமாக அளித்துவிட்டுச் சென்றார். இப்படியாக உனது பக்தர்களை கண்டு சிவன் பெரிதும் மகிழ்கிறார். இதன் காரணமாகவே, நீ மூன்று மூர்த்திகளின் வடிவம் என்பதும் நீயே அனைத்தும் என்றும் உணரலாம் அல்லவா?
10. த்ரி அம்சே அஸ்மிந் ஸத்யலோகே விதி
ஹரி புரபிந் மந்த்ராணி ஊர்த்வம்
தேதேப்ய: அபி ஊர்த்வம் து மாயா விக்ருதி
விரஹித: பாதி வைகுண்ட லோக:
தத்ர த்வம் காரண அம்பஸி அபி
பசுப குலே சுத்த ஸத்வ ஏகரூபீ
ஸத் சித் ப்ரஹ்ம அத்வய ஆத்மா பவந
புர பதே பாஹிமாம் ஸர்வ ரோகாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸத்யலோகம் என்பது ப்ரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் ஆகிய மூன்றையும் உடையது. அவை ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன. அவை மூன்றுக்கும் மேலே உள்ளதும். மாயை என்பது தீண்டாமல் உள்ளதும் ஆகிய இடமே உனது வைகுண்டம் ஆகும். நீ வைகுண்டத்திலும், ப்ரளய கால நீரிலும், க்ருஷ்ணாவதார காலத்தில் கோகுலத்திலுமாக உள்ளாய். ஸச்சிதானந்த ரூபமாகவும், பரப்ரஹ்மமாகவும் உள்ளாய். இப்படியான நீயே எனது பிணிகளை நீக்க வேண்டும்.