நாமக்கல் நாச்சாரம்மன் கோவிலில் அரசு வேம்பு திருக்கல்யாணம்!
ADDED :3786 days ago
நாமக்கல்: நாமக்கல் வண்டிக்காரத் தெருவில் உள்ள நண்பர்கள் குழு சார்பில், நாச்சாரம்மன் கோவிலில் அரசு வேம்பு திருமணம் நடந்தது. ஆக., 26ம் தேதி காலை, மோகனூர் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு மாலை அம்மன் ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. நேற்று, 27ம் தேதி அதிகாலை அரசு வேம்பு திருமணம் நடந்தது. அரசு மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், ஸ்வாமிக்கு மாவிளக்கு பூஜை செய்து அம்மனை திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.