நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு, நாகாத்தம்மன் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டிலுள்ளது நாகாத்தம்மன் கோவில். இக்கோவிலில் வளாகத்தில், நாகாத்தம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 20ம் தேதி, காலை முகூர்த்த கம்பஸ்தாபனம் (பந்தக்கால்) நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் கடந்த, 25ம் தேதி காலை 8:30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், பஞ்சகவ்ய பூஜையும், புதிய பி ம்பத்திற்கு அஷ்டாதசரிசையும் நடந்தது. அதன்பின், மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. பின், ÷ நற்று, காலை 5:30 மணிக்கு, 4ம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மூலாலய மூர்த்தி மற்றும் பரிவார சன்னிதிகளான, விநாயகர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.