உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா!

சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா!

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் 30  ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் இருந்த இடத்தில், புதிதாக கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி, மாலை 3:00 மணிக்கு சிலைகள் கரிக்கோலம் வலம் வருதல் நடந்தது.  மாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பார்த்தசாரதி ஹோமம், நேற்று காலை இரண்டாம் கால பூஜை, யாக சாலை நிகழ்ச்சிகள் நடந்தது.  ய õகசாலையில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !