உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திராசு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

திராசு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பண்ருட்டி: திராசு கிராமம் சாந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் புதிதாக கட்டிய சாந்த முத்துமாரியம்மன், விநாயகர், முத்துமாரியம்மன், முருகன், மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, 26ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜை, தத்துவார்தனை, விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை, காலை 8:30 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:00 மணியளவில் விமானத்திற்கும், 9:20 மணியளவில் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !