மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்!
ADDED :3877 days ago
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 57-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 19-ம் தேதி துவங்கியது. தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு ஊர்வலம் நடைபெற்று வந்தது.தேர் வீதியுலா, நேற்று நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மணக்குள விநாயகர் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.திரளான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.