நடராஜருக்கு ஆவணித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு
ADDED :3879 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவில் நடராஜருக்கு ஆவணித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆவணித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. காலை திருவாசகம் முற்றோதல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பன்னிரு திருவாசகம் விண்ணப்பத்தி, நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருசங்கு, கயிலை வாத்தியம், பிரம்மதாளம் முழுங்க பூஜைகள் நடத்தப்பட்டது. நாளை(30ம் தேதி) திருவாசகம் முற்றோதல், திருமுறை இசை வகுப்பு, பெரியபுராண சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.